18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தரங்கம்பாடி அருகே பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து SDPI கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

தரங்கம்பாடி அருகே பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து SDPI கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

எழுதியவர்: mohan June 27, 2020, 5:33 pm

SDPI கட்சி சார்பில் இன்று தமிழகம் முழுவதும் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே சங்கரன்பந்தல் கிராமத்தில் SDPI கட்சி சார்பாக கடைவீதியில் சமூக இடைவெளி விட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்தில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி சாத்தான்குளத்தில் தந்தை மகன் உயிரிழப்புக்கு காரணமான் காவல் அதிகாரிகளுக்குஉரிய நடவடிக்கை தண்டனைகளை வழங்கக்கோரியும் மத்திய மாநில அரசு பெட்ரோல் டீசல் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி கொரோனாவால் பாதிக்கப்பட்ட வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்க வலியுறுத்தியும் மற்றும் மின்கட்டணத்தை குறைக்க வலியுறுத்தியும் SDPI கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில், கிளைச்செயலாளர் காதர், துணைச் செயலாளர் சல்மான், பொருளாளர் மாலிக், மாவட்ட பொதுச்செயலாளர் முஹம்மது ரபி, மற்றும் செயல்வீரர்கள் சமூக இடைவெளிவிட்டு கலந்துகொண்டனர்.

இரா. யோகுதாஸ், மயிலாடுதுறை  செய்தியாளர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!