17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சிலைமான் அருகே சிறுமியை கடத்திச் சென்று கற்பழித்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது

சிலைமான் அருகே சிறுமியை கடத்திச் சென்று கற்பழித்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது

எழுதியவர்: mohan June 27, 2020, 5:06 pm

மதுரை சிலைமான் அடுத்த சக்குடி மேலக் காரிசேரி பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் சதீஷ் ( 22).இவர் அதே பகுதியில் வசிக்கும் சிறுமி ஒருவரை காதலித்து வந்தார். அந்த மாணவி இளமனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்.இந்த நிலையில் சிறுமியின் காதல் விஷயம் வீட்டுக்கு தெரிய வந்தது. இதையடுத்து சிறுமியின் தாய் சதீஷ் வீட்டுக்கு சென்று, ” என் மகளை இனிமேல் தொந்தரவு செய்யாதே” என்று எச்சரித்து விட்டு திரும்பி உள்ளார்.இந்த நிலையில் கடந்த 23ம் தேதி இரவு வீட்டிலிருந்து வெளியே சென்ற சிறுமியை காணவில்லை.

இதையடுத்து பெற்றோர் அலறியடித்துக் கொண்டு பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். இந்த நிலையில் சிறுமி கடந்த 25 ஆம் தேதி இரவு 7 மணியளவில் மீட்கப்பட்டார்.அப்போது அவரிடம் போலீசார் விசாரித்தபோது, “மேல கார்சேரியை சேர்ந்த சதீஷ் என்பவர் மோட்டார் சைக்கிளில் கார்சேரி கண்மாய்க்கு கடத்திச் சென்று, திருமணம் செய்வதாக வாக்குறுதியின் பேரில் கற்பழித்தது தெரியவந்தது.இதையடுத்து சிலைமான் போலீசார் சிறுமியை கற்பழித்ததாக சதீஷை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!