18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டி பகுதியில் கொரோனாவை ஒழிக்கும் முயற்சியில் காவல்துறை.

உசிலம்பட்டி பகுதியில் கொரோனாவை ஒழிக்கும் முயற்சியில் காவல்துறை.

எழுதியவர்: mohan June 27, 2020, 4:32 pm

மதுரை மாவட்டத்தில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில் அதனை தடுக்கும் முயற்சியில் சுகாதாரத்துறை ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதால் அதனை தடுக்கும் முயற்சியில் சுகாதாரத் துறையினருடன் இணைந்து காவல்துறை தற்போது கைகோர்த்துள்ளது. இந்நிலையில் உசிலம்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் ராஜா உத்தரவின்படி, காவல் ஆய்வாளர் சார்லஸ் ஆலோசனையின்படி நகர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் சிவபாலன் உசிலம்பட்டி பகுதி மக்களை கொரோனாவிடமிருந்து பாதுகாக்க காவல்துறை சார்பில் 250 கபசுர குடிநீர் பவுடர் பாக்கெட்டுகளை தன்னார்வ இளைஞர்கள் மூலம் பொது மக்களுக்கு வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் உசிலம்பட்டி பகுதியில் காவல் துறை சார்பில் வழங்கப்பட்ட கபசுரக் குடிநீர் பொடிகளை குடிநீராக காய்ச்சி பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மருந்தான கபசுர குடிநீரை தன்னார்வ இளைஞர் குழு சவுந்தரபாண்டியன் தலைமையிலான இளைஞர்கள் பொது மக்களுக்கு வழங்கினார்கள். அதனை தொடர்ந்து காவலர் குடியிருப்பு பகுதி, விளையாட்டு மைதானம் போன்ற பகுதிகளிலும் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது .இதில் சமூக இடைவெளியை பின்பற்றி கபசுர குடிநீரை பொதுமக்கள் பெற்றுச் சென்றனர்.கபசுர குடிநீர் வழங்கிய காவல்துறையினருக்கும் தன்னார்வ இளைஞர்களுக்கும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

உசிலை சிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!