18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆக்கூர் ஊராட்சியில் கூட்ட அரங்கம் திறப்புவிழா

ஆக்கூர் ஊராட்சியில் கூட்ட அரங்கம் திறப்புவிழா

எழுதியவர்: mohan June 27, 2020, 12:00 pm

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆக்கூர் ஊராட்சியில் கூட்ட அரங்கம் திறப்பு விழா நடைபெற்றது.நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் சந்திரமோகன் தலைமை வகித்தார், ஒன்றிய பொறியாளர் விஜயன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்,ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சிங்காரவேலு வரவேற்றார்.

பூம்புகார் சட்டமன்ற அஇஅதிமுக உறுப்பினர் எஸ்.பவுன்ராஜ் கலந்துகொண்டு புதிதாக கூட்ட அரங்கை திறந்து பேசினார். ஒன்றிய பெருந்தலைவர் நந்தினி ஸ்ரீதர், ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் தியாகராஜன், அருண் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார். ஊராட்சி செயலாளர் மாரி. தட்சிணாமூர்த்தி, வார்டு கவுன்சிலர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில்  ஆக்கூர் ஊராட்சி  செயலாளர் முருகானந்தம் நன்றி கூறினார்.

இரா. யோகுதாஸ், மயிலாடுதுறை  செய்தியாளர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!