17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை அரசு மருத்துவமனையில் கவனிப்பின்றி இருக்கும் கொரோனோவால் இறந்தவர்களின் உடல்கள்.. ??

மதுரை அரசு மருத்துவமனையில் கவனிப்பின்றி இருக்கும் கொரோனோவால் இறந்தவர்களின் உடல்கள்.. ??

எழுதியவர்: ஆசிரியர் June 26, 2020, 9:17 pm

கொரோனா சிறப்பு வார்டில் இறந்தவர்களின் உடல்களை உடனடியாக அகற்றுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மதுரை கொரோனா சிறப்பு வார்டில் சிகிச்சை பெறும் இடத்திலேயே இறந்தவர்களின் உடலையும் அங்கேயே வைத்திருப்பதால் சிகிச்சை பெறும் நோயாளி ஒருவர் தற்கொலை செய்ய போவதாக மிரட்டல் விடுத்துள்ளார். இதனையடுத்து அவரை சமாதானப் படுத்திய மருத்துவ துறை அதிகாரிகள் கொரோனா வார்டில், வைக்கப்பட்டிருந்த பிணத்தை வெளியே கொண்டு சென்றனர்.

அதே போல், மதுரையில் கொரோனோ தொற்றின் வீரியம், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில், மதுரை ராஜாஜி மருத்துவமனையில் உள்ள வார்டிலும், சிகிச்சை அளிப்பவர்களும் அலட்சியமாக செயல்படுவதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இறந்த உடனடியாக அகற்றாமலும், இறந்தவர்கள் இருந்த படுக்கைகளை கிருமி நாசினியை கொண்டு சுத்தப்படுத்துவதில்லை, மேலும் கொரோனா வார்டில் உள்ள கழிப்பறைகளையும் சுத்தப்படுத்துவதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!