17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டியில் மதியம் 2 மணி வரை மட்டுமே கடைகள் செயல்பட கோட்டாச்சியர் உத்தரவிட்டுள்ளார்.மேலும் கூட்டம் கூடியவர்களை போலிசார் விரட்டியத்தனர்.

உசிலம்பட்டியில் மதியம் 2 மணி வரை மட்டுமே கடைகள் செயல்பட கோட்டாச்சியர் உத்தரவிட்டுள்ளார்.மேலும் கூட்டம் கூடியவர்களை போலிசார் விரட்டியத்தனர்.

எழுதியவர்: mohan June 26, 2020, 5:57 pm

தமிழகம் முழுவதும் கொரோனா தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் சென்னை உள்ளிட்ட மதுரை போன்ற பகுதிகளில் முழு ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. ஆனால் மதுரை மாவட்டத்தில் மாநகராட்சிஇ பரவைஇ திருப்பரங்குன்றம்இ திருமங்கலம் போன்ற பகுதிகள் மட்டும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. மேலூர்இ சோழவந்தான்இ உசிலம்பட்டி போன்ற பகுதிகளில் முழு ஊரடங்கு உத்தரவு இல்லை.இதனால் பொது மக்களில் பலர் முகக்கவசத்தை மறந்து கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிந்தனர்.இதனால் உசிலம்பட்டி கோட்டாச்சியர் ராஜ்குமார் உசிலம்பட்டிப் பகுதியில் இன்று முதல் கடைகள் மதியம் 2 மணி வரை மட்டுமே திறக்க உத்தரவிட்டுள்ளார்.மேலும் அனைவரும் பொதுவெளியில் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வர வேண்டும்.இல்லையென்றால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.

இந்நிலையில் இன்று பேரையூர் ரோட்டில் கட்டிட தொழிலாளர்கள் கூட்டமாகவும்இ முககவசம் இல்லாமலும் நின்றுகொண்டிருந்ததால் போக்குவரத்து போலீசார் சமூக இடைவெளியுடன் நிற்கும.;படி எச்சரித்தனர்.பலமுறை எச்சரித்தும் கேட்காததால் போலிசார் ஒருவர் கையில் லத்தியுடன் அவர்களை விரட்டியடித்தார். இதனால் கட்டிட தொழிலாளர்கள் தலைதெறிக்க ஓடினர். மேலும் உசிலம்பட்டியிலிருந்து திருமங்கலம் மதுரை திண்டுக்கல் தேனி போன்ற பகுதிகளுக்கு செல்லும் அரசு பேருந்துக்கள் பணிமணையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. உசிலம்பட்டி பேருந்து நிலையிலிருந்து 5 பேருந்துகள் மட்டும பேரையூர் தொட்டப்பநாயக்கணூர் செக்காணூரணி டி.கல்லுப்பட்டி எழுமலை போன்ற பகுதிகளுக்கு செல்கிறது.

உசிலை சிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!