17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீரிபட்டியில் பொதுப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்புக்களை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து இரு தரப்பினர் போலிசார் முன்னிலையில் மோதிக் கொண்டதால் பரபரப்பு ஏற்ப்பட்டத.

கீரிபட்டியில் பொதுப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்புக்களை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து இரு தரப்பினர் போலிசார் முன்னிலையில் மோதிக் கொண்டதால் பரபரப்பு ஏற்ப்பட்டத.

எழுதியவர்: mohan June 26, 2020, 5:50 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கீரிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணண் மகன் ஈஸ்வரன்(32). தனியார் கல்லூரி பேராசிரியரான இவர் தனிநபர் ஆக்கிரமித்துள்ள தெருப் பொதுப்பாதையை அகற்ற வேண்டுமென உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பொதுப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்புக்களை உடனடியாக அகற்ற வேண்டும் என (16.03.2020ம் தேதி) உத்தரவிட்டார். இந்நிலையில் அதிகாரிகள் இதுவரை ஆக்கிரமிப்புக்களை அகற்ற முன்வராத நிலையில் இன்று ஆக்கிரமிப்புக்களை அகற்ற வருவாய்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் கீரிபட்டி கிராமத்திற்குச் சென்றனர். தெரு பொதுப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்புக்களை அகற்றிய போது எதிர்தரப்பில் உள்ள சில பெண்கள் ஆக்கிரமிப்புக்களை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.இவர்களை போலிசார் தடுத்து மண்ணெண்ணை கேனை பறித்தனர்.இந்நிலையில் இரு தரப்பினரும் போலிசார் முன்னிலையில் திடீரென மோதிக் கொண்டனர்.இதை சற்றும் எதிர்பார்க்காத போலிசார் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மோதல் ஏற்ப்படும் சூழ்;நிலை உருவானதால் ஆக்கிரமிப்புக்களை அகற்றாமல் அதிகாரிகள் சென்றனர்.

உசிலை சிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!