17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » தனியார் நிதி நிறுவனத்தில் மகளிர் குழுக்கள் வாங்கிய கடனை வட்டியோடு திரும்பச் செலுத்தச் சொல்லி வற்புறுத்தல்.. ஆட்சியரிடம் மனு..

தனியார் நிதி நிறுவனத்தில் மகளிர் குழுக்கள் வாங்கிய கடனை வட்டியோடு திரும்பச் செலுத்தச் சொல்லி வற்புறுத்தல்.. ஆட்சியரிடம் மனு..

எழுதியவர்: ஆசிரியர் June 26, 2020, 3:11 pm

தனியார் நிதி நிறுவனத்தில் மகளிர் குழுக்கள் வாங்கிய கடனை வட்டியோடு திரும்பச் செலுத்தச் சொல்லி வற்புறுத்துவதாக இந்திய மாதர் சங்கம் சார்பாக 50க்கும் மேற்பட்ட பெண்கள் விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் மனு.

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் உள்ள பல நிதி நிறுவனங்கள் சுய உதவி குழுவில் பெண்களுக்கு கடன் வழங்கி உள்ளார்கள். கடன் வாங்கிய அனைவரும் அந்தப் பகுதியை சுற்றி உள்ள பட்டாசு தொழில் தீப்பெட்டி தொழிற்சாலையை அன்றாட கூலி வேலை செய்பவர்கள் அதனை நம்பி கடன் வாங்கி உள்ளார்கள்.

கடந்த மார்ச் மாத இறுதியில் இருந்து மூன்று மாதத்திற்கு மேலாக கோரோனோ நோயின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மத்திய மாநில அரசாங்கம் தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு அமல் படுத்தியது. இந்த நாள் பல பெண்கள் வேலையை இழந்தனர் தமிழக அரசாங்கம் குரோனோ காலம் முடியும் வரை வாங்கிய கடனை திரும்ப செலுத்த தேவையில்லை என்றும் கூறியது. இந்த காலகட்டத்தில் சுய உதவி குழுக்கள் மூலம் பெண்கள் வாங்கிய கடனை கேட்டு துன்புறுத்தக் கூடாது என்றும் அவர்கள் வாங்கிய கடனைதிரும்ப செலுத்த ஆறு மாத காலம் அவகாசம் கொடுக்க வேண்டும் என்றும் மாநில அரசாங்கம் அரசாணை வெளியிட்டு இருந்தது.

அதனை மீறியும் பல தனியார் நிதி நிறுவனங்கள் தங்களிடம் வாங்கிய கடனை வட்டியோடு திரும்பச் செலுத்த கோரி மகளிர் குழுக்களை வற்புறுத்தி வருகிறது. அப்படி கட்ட தவறினால் அவர்களுடைய ரேஷன் கார்டுகளை முடக்குவோம் என்றும் இல்லையென்றால் வாங்கிய கடனுக்கு கூடுதலாக வட்டியை கட்ட வேண்டியது இருக்கும் என்றும் மிரட்டுகிறார்கள். இது சம்பந்தமாக சாத்தூர் வட்டாட்சியரிடம் பேச்சுவார்த்தை நடத்தி தங்களிடம் வாங்கிய கடனை ஆறு மாத காலத்திற்கு கட்ட வேண்டியதில்லை என்று தனியார் நிதி நிறுவனங்கள் வாக்குறுதி அளித்தனர்.

ஆனால் அதையும் மீறி சில தனியார் நிதி நிறுவனங்கள் உடனடியாக தங்களிடம் வாங்கிய கடனை வட்டியுடன் திரும்ப செலுத்த கோரி தங்களை மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருவதாக கூறி மாவட்ட ஆட்சியர் கண்ணனிடம் மாதர் சங்கம் சார்பாக மகளிர் குழுக்களை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பெண்கள் மனு அளித்தனர்

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!