18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டி அருகே குப்பணம்பட்டியில் தண்ணீர் தேடி ஊருக்குள் வழிதவறி வந்த புள்ளிமான் மீட்பு.

உசிலம்பட்டி அருகே குப்பணம்பட்டியில் தண்ணீர் தேடி ஊருக்குள் வழிதவறி வந்த புள்ளிமான் மீட்பு.

எழுதியவர்: mohan June 26, 2020, 3:12 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ளது குப்பணம்பட்டி கிராமம். இந்த கிராமத்திற்குள் 5வயது மதிக்கத்தக்க புள்ளிமான் ஒன்று தண்ணீர் தேடி ஊருக்குள் வழி தவறி புகுந்தது. இதனையறிந்த கிராமத்தினர் புள்ளிமானை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பின்னர் சுமார் 2மணி நேரமாக போராடி புள்ளிமானை உயிருடன் பிடித்து அங்குள்ள மரத்தில் கட்டிவைத்தனர். அதன் பின் உசிலம்பட்டி காவல்துறைக்கு தகவல் தெரிவித்து விட்டு பின் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த வனத்துறை அதிகாரிகள் கிராமத்தினர் மீட்டுள்ள புள்ளிமானை பத்திரமாக வனப்பகுதிக்குள் விடுவதற்காக வாகனத்தில் ஏற்றிசென்றனர்.

உசிலை சிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!