17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராஜபாளையம் அருகே காந்தி தேசிய ஊரகத் திட்டத்தின் கீழ் குடிநீர் மேல்நிலை தொட்டி மற்றும் புதிய பாலம் அமைப்பதற்கான பணிகள் துவக்கம்..

இராஜபாளையம் அருகே காந்தி தேசிய ஊரகத் திட்டத்தின் கீழ் குடிநீர் மேல்நிலை தொட்டி மற்றும் புதிய பாலம் அமைப்பதற்கான பணிகள் துவக்கம்..

எழுதியவர்: ஆசிரியர் June 26, 2020, 3:04 pm

இராஜபாளையம் அருகே மகாத்மா காந்தி தேசிய ஊரகத் திட்டத்தின் கீழ் 80 லட்சம் மதிப்பிலான குடிநீர் மேல்நிலை தொட்டி மற்றும் புதிய பாலம் அமைப்பதற்கான பணிகளை ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் பூமி பூஜை போட்டு துவங்கி வைத்தார்.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தேசிகாபுரம் பகுதியில் நீண்ட நாட்களாக பாலம் அமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இராஜபாளையம் ஊராட்சி மன்ற பெருந்தலைவர் சிங்கராஜ் மற்றும் துணைத்தலைவர் துரை கற்பகராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார் ,சோழவரம் ஊராட்சி மன்ற தலைவி மாரீஸ்வரி மற்றும் அரசு அதிகாரிகள் கலந்துகொண்டு 43.56 லட்சம் மதிப்பில் புதிய பாலம் அமைக்கும் பணியும் 13.25 குடிநீர் மேல்நிலைத் தொட்டி மற்றும் கிணறு தூர் வாறும் பணி என மொத்தம் 80 லட்சம் மதிப்பிலான பணிகளுக்கான பூமி பூஜை போட்டு பணிகளை துவங்கி வைத்தார். இதனால் சோழபுரம் பஞ்சாயத்திற்க்கு உட்பட்ட பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் பாலம் அமைக்கும் பணி நடைபெறுவதால் அப்பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!