17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கிடங்கல் ஊராட்சியில் பகுதி நேர அங்காடி திறப்பு

கிடங்கல் ஊராட்சியில் பகுதி நேர அங்காடி திறப்பு

எழுதியவர்: mohan June 25, 2020, 6:33 pm

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்ற தொகுதி கிடங்கல்  ஊராட்சியில் பகுதி நேர அங்காடியை  நேற்று  எம்.எல்.ஏ. எஸ்.பவுன்ராஜ் திறந்து வைத்தார். செம்பனார்கோவில் அருகே கிடங்கல் ஊராட்சியில் பகுதி நேர அங்காடி திறக்கும் நிகழ்ச்சி  நடைப்பெற்றது. இதில் பூம்புகார் சட்டமன்ற அதிமுக உறுப்பினர் எஸ். பவுன்ராஜ் கலந்துக்கொண்டு குத்துவிளக்கு ஏற்றி புதிய அங்காடியை திறந்து வைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்கி துவக்கிவைத்தார்.இதனால் இப்பகுதியை சுற்றியுள்ள கிடங்கல், ராமச்சந்திரன்கோவில்பத்து, வல்லம்பைநத்தம், ஆறுமாகட்டளை, கீழத்தெரு, மேலத்தெரு உள்ளிட்ட 260 குடும்ப அட்டைதாரர்களுக்கு இந்த பகுதி நேர அங்காடி மூலம் அரசின் ரேஷன் பொருட்களை பெற முடியும்.

இதில், மயிலாடுதுறை துணைப்பதிவாளர் பன்னீர்செல்வம், கூட்டுறவு சார்பதிவாளர் பன்னீர்செல்வம், களஅலுவலர் நடராஜன், வட்டவழங்கல் அலுவலர் காந்திமதி, ஆக்கூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க  தலைவர் ராமலிங்கம், ஊராட்சிமன்றத்தலைவர்கள் நடராஜன், கரிகாலன் மற்றும் கிடங்கல் ஊராட்சி கிராம மக்கள் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.

இரா.யோகுதாஸ், மயிலாடுதுறை  செய்தியாளர்.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!