17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நிலக்கோட்டை பேரூராட்சி பகுதியில் திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

நிலக்கோட்டை பேரூராட்சி பகுதியில் திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

எழுதியவர்: mohan June 25, 2020, 5:48 pm

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பேரூராட்சி பகுதியில் கடந்த சில மாதங்களாக நிலக்கோட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட சாக்கடை கழிவு நீர்களை மத்திய அரசின் திரவ கழிவு மேலாண்மை திட்டத்தின் மூலம் சாக்கடைகளை ஒருங்கிணைத்து நீரை சுத்திகரித்து கண்மாய்க்குள் செல்வதற்கான திட்டப்பணிகள் நடைபெற்று வந்தது.திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் விஜயலட்சுமி  திடீரென ஆய்வு செய்தார. அப்போது அங்கிருந்த மாவட்ட பேரூராட்சிகள் உதவி இயக்குனர் குருராஜன் அழைத்து தற்போது பணிகள் முடுக்கி விடப்பட்டு வேகமாக முடிக்கப்பட வேண்டும் எனவும் கூறினார்.

நிலக்கோட்டை தாலுகா அலுவலக புதிய கட்டடம் கட்டும் பணியை நேரில் சென்று ஆய்வு செய்து தாசில்தார் மற்றும் அப்பணியைச் செய்யக்கூடிய ஒப்பந்ததாரர்களே அழைத்து விரைவாகவும் சிறப்பாக முடிக்க வேண்டும் என உத்தரவிட்டார். அப்போது உடன் நிலக்கோட்டை தாசில்தார் யூஜின், நிலக்கோட்டை பேரூராட்சி செயல் அலுவலர் கலையரசி, சுகாதார ஆய்வாளர் செந்தில்குமார், வருவாய் ஆய்வாளர் சென்னா கிருஷ்ணன், ராமன் நிர்வாக அலுவலர் ராமமூர்த்தி உட்பட பலர் இருந்தனர்.

நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!