17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நிச்சயதார்த்தப் பெண்ணிற்கு கொரோனா.. விழாவிற்குவந்தவர்களுக்கும் பரிசோதனை..

நிச்சயதார்த்தப் பெண்ணிற்கு கொரோனா.. விழாவிற்குவந்தவர்களுக்கும் பரிசோதனை..

எழுதியவர்: ஆசிரியர் June 25, 2020, 4:37 pm

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நிச்சாயதார்த்தம் நடைபெற்ற 25 வயது பெண்ணுக்கு கொரோனா தொற்று. சிகிச்சைக்கு அழைக்க சென்ற அதிகாரிகள் அதிர்ச்சி. நிச்சயதார்த்தத்தில் கலந்து கொண்டோர் கூண்டோடு பரிசோதனைக்கு அழைத்து சென்றனர்.

காரியாபட்டியில் தாலுகா அலுவலகம் முன்பு விதை உற்பத்தியாளர்கள் சங்கம் அலுவலகம் உள்ளது. அந்த அலுவலகத்தில் பணிபுரியும் காரியாபட்டி பாண்டியன் நகரைச் சேர்ந்த பெண் (25 )ஒருவர் பணியாற்றி வருகிறார்.

இதே அலுவலகத்தில் கோவில்பட்டியை சேர்ந்தவருக்கும் கடந்த 20 நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அந்த அலுவலகத்தில் பணிபுரிந்த பெண் மற்றும் நிறுவனர் மற்றும் பணியாளர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையில் அந்தப் பெண்ணிற்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில்  காவல்துறை, சுகாதாரத்துறையினர் வீட்டிற்கு சென்று பார்த்தபோது அந்த பெண்ணிற்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் நிச்சயதார்த்தத்தில் கலந்துகொண்ட 50க்கும் மேற்பட்டவர்களை பரிசோதனைக்காக அழைத்துச் சென்றனர்.

மேலும் அந்தப் பெண் வசித்துவந்த பாண்டியன்நகர் பகுதி முழுவதும் காவல்துறையினரால் சீல் வைக்கப்பட்டுள்ளது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!