17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பாஜக இளைஞரணி நிர்வாகி கார் மீது தாக்குதல்.போலீஸ் விசாரணை..

பாஜக இளைஞரணி நிர்வாகி கார் மீது தாக்குதல்.போலீஸ் விசாரணை..

எழுதியவர்: mohan June 25, 2020, 4:38 pm

மதுரை மாவட்டம் அவனியாபுரம் காவல் எல்லைக்குட்பட்ட வில்லாபுரம் பகுதியில் மதுரை மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மதுரை மாவட்ட இளைஞரணி நிர்வாகியாக இருக்கும் முருகேசன்  இரவு தன் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்து இனோவா கார் இன்று காலை பந்து பார்க்கும்பொழுது பின்புற கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டது. மேலும் இதுதொடர்பாக முருகேசன்  அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு இடம் விரைந்த அவனியாபுரம் போலீசார் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள் .கடந்த சில நாட்களுக்கு முன் பாஜக நிர்வாகி மீது திமுக சட்டமன்ற உறுப்பினர் தாக்க முயன்ற காட்சி இணையத்தில் வைரல் ஆனது .இதனைத் தொடர்ந்து அவர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்ட நிலையில் தற்போது வில்லாபுரம் பகுதியில் பாஜக நிர்வாகி கார் நொறுக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!