17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் மதுரையில் அதிகரிப்பு . மக்கள் அச்சம்.

கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் மதுரையில் அதிகரிப்பு . மக்கள் அச்சம்.

எழுதியவர்: mohan June 25, 2020, 4:17 pm

மதுரையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. மதுரையில் மட்டும் இன்று 152 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.தற்போது மதுரை மாநகரில் ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில் உயிரிழப்பு அதிகரித்து உள்ளது. மேலும் தொற்றும் அதிக அளவில் உறுதி செய்யப்பட்டு மதுரை மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை தொடர்ந்து மதுரையில் அதிக அளவில் பரவி வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது உறுதி செய்யப் பட்டவர்களின் எண்ணிக்கை 1225 பாதிக்கப்பட்டவர்கள் உயர்ந்துள்ளது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!