18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » விருதுநகர் மாவட்டம் சிவகாசி நகராட்சி பகுதிகளில் பல்வேறு பணிகளுக்கு அமைச்சர் பூமி பூஜை..

விருதுநகர் மாவட்டம் சிவகாசி நகராட்சி பகுதிகளில் பல்வேறு பணிகளுக்கு அமைச்சர் பூமி பூஜை..

எழுதியவர்: ஆசிரியர் June 25, 2020, 12:11 pm

விருதுநகர் மாவட்டம் சிவகாசி நகராட்சி பகுதிகளில் புதிய சமுதாயக் கூடம், பயணிகள் நிழற்குடை, கலையரங்கம் உள்ளிட்ட கட்டிடங்கள் சிவகாசி சட்டமன்ற தொகுதி நிதியில் இருந்து 1 கோடி ரூபாய் மதிப்பில் கட்டுவதற்கு பூமி பூஜை நடைபெற்றது பின்னர் செய்தியாளர்களிடம் பேசும் போது,

திமுக தலைவர் முக ஸ்டாலினை முதல்வராக தமிழக மக்கள் மட்டுமல்லாமல் புலம்பெயர் தமிழர், ஈழத்தமிழர்கள் என எந்த தமிழர்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். திமுகவில் உள்ளவர்கள் மட்டுமே மு.கஸ்டாலினை முதல்வர் என கூறிவருக்கிறார்கள், வாக்களிக்கும் மக்கள் அவ்வாறு நினைக்கவில்லை.

முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு காரணமான கட்சி காங்கிரஸ் மற்றும் திமுக கட்சியினர் என்பதை இன்னும் தமிழர்கள் மறக்கவில்லை. இலங்கை அரசு எடுத்த அரக்கத்தனமான முடிவிற்கு துணை போனது காங்கிரஸ் திமுக கூட்டணி ஆட்சி. முக. ஸ்டாலின் முதல்வராவது என்பது கானல் நீர் கனவு நீர். அதிமுகதான் தொடர்ந்து ஆட்சியமைக்கும் எடப்பாடி பழனிச்சாமிதான் முதல்வராக இருப்பார் இப்போதுள்ள நிலைதான் தொடரும்.

அதிமுக அமைச்சர்கள் அனைவரும் மனிதநேயம், தர்ம சிந்தனை, ஆன்மீக சிந்தனை, கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள். பாவச் செயலை செய்யக்கூடிய பழக்கமான கட்சி திமுக.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் விசாரணைக்கு சென்ற தந்தை மகன் உயிரிந்த நிலையில் தமிழகத்தில் விசாரணைக்கைதிகள் உயிரிழக்கும் சம்பவம் அதிகரித்து வருவதாக முக ஸ்டாலின் கூறிய கருத்திற்கு பதில் அளித்த அமைச்சர். சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது வன்முறை செயல்களின் ஊன்றுகோலாய் இருந்தது திமுக ஆட்சி என்பதை மக்கள் மறக்கமாட்டார்கள்.

1991, 2011 ஆண்டு வரிசையில் 2021ம் ஆண்டும் அதிமுகவிற்கு ராசியான ஆண்டு என்பதால் அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் அதிமுக தொடர்ச்சியாக 3 வது முறையாக வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என்றார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!