18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கோவில்பட்டி கிளை சிறையில் தந்தை, மகன் இருவர் மர்மமான முறையில் உயிரிழந்ததை கண்டித்து கடைகளை அடைத்து வணிகர்கள் போராட்டம்…

கோவில்பட்டி கிளை சிறையில் தந்தை, மகன் இருவர் மர்மமான முறையில் உயிரிழந்ததை கண்டித்து கடைகளை அடைத்து வணிகர்கள் போராட்டம்…

எழுதியவர்: ஆசிரியர் June 25, 2020, 11:56 am

கோவில்பட்டி கிளை சிறையில் தந்தை, மகன் இருவர் மர்மமான முறையில் உயிரிழந்ததை கண்டித்து ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்று வட்டார பகுதிகளில் 200க்கு மேற்பட்ட செல்போன் கடைகளை அடைத்து வணிகர்கள் போராட்டம்.

கோயில்பட்டியில் வியாபரிகள் மற்றும் காவல்துறையினருக்கு ஏற்பட்ட தகராறில் தந்தை, மகன் ஆகியோர் கைது செய்யப்பட்டு கோவில்பட்டி கிளைச் சிறையில் மர்மமான முறையில் உயிரிழந்தனர். இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்த நிலையில் வணிகர்கள் சார்பில் இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் தந்தை, மகன் என இருவர் உயிரிழந்தது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க கோரி 200 க்கும் மேற்பட்ட செல்போன் கடைகளை அடைத்து வியாபாரிகள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!