17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பரவைபேரூராட்சியில் கொரோனா ஊடரங்கையொட்டி எல்லைகள் மூடப்பட்டது…

பரவைபேரூராட்சியில் கொரோனா ஊடரங்கையொட்டி எல்லைகள் மூடப்பட்டது…

எழுதியவர்: ஆசிரியர் June 24, 2020, 9:19 pm

மதுரை மாவட்டத்தில் மதுரைநகர், திருப்பரங்குன்றம், மதுரை வடக்கு,மேற்கு மற்றும் பரவை பேரூராட்சி பகுதிகளில் கொரோனா வைரஸ்நோய்தொற்று பரவாமல் தடுக்கும் நடவடிக்கையில் மாவட்டநிர்வாகம் 23ந்தேதி இரவு12மணி முதல் 30ந்தேதிவரை ஊரடங்கு அறிவித்துள்ளது.

அதனால் பரவை பேரூராட்சிக்குட்பட்ட எல்லைகள் அதலை சாலை, மதுரை சாலையில் பரவை கீழ்பாலம், துவரிமான் சாலை ஆகியவற்றை தடுப்புதகரங்களை கொண்டு அடைத்து மூடும்பணி நடந்தது. இந்த பணியினை செயல்அலுவலர் சுந்தரி தலைமையில் இளநிலை உதவியாளர் முத்துபாண்டி, பணிஆய்வாளர் கருப்பையா, குடிநீர்வழங்கல் மேற்பார்வையாளர் சுந்தரராஜன், சுகாதாரபணி மேற்பார்வையாளர் ராமு உள்பட சுகாதாரபணியாளர்கள் மேற்கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!