17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கொரோனா சிகிச்சைக்கு ரயில்வே ஆஸ்பத்திரியை வழங்குவதாக ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு…

கொரோனா சிகிச்சைக்கு ரயில்வே ஆஸ்பத்திரியை வழங்குவதாக ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு…

எழுதியவர்: ஆசிரியர் June 24, 2020, 9:15 pm

மதுரையில் கொரோனா தொற்று அதிகமானதை தொடர்ந்து மதுரை மாவட்டம் முழுவதும் ஒரு வார காலத்திற்கு முழுஅடைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மாநில அரசு ஆஸ்பத்திரிகளில் கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகள் அதிகமாக அனுமதிக்கப்படுகிறார்கள். எனவே மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகம் தனது ரயில்வே மருத்துவமனையை கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அனுமதி வழங்கியுள்ளது.

இதற்காக பல படுக்கைகள் கொண்ட மருத்துவப் பிரிவு தனித்தனி சிறு அறைகளாக மாற்றப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த ஆக்சிசன் வழங்கல் தொடர்பு வசதி, காற்றோட்ட வசதி, அலைபேசி மின்னூட்ட வசதி, இசை மற்றும் பொது அறிவிப்புகள் ஒலிபரப்பு கருவி, ஜன்னல்களில் உயர்ரக கொசு வலைகள் ஆகியவை நிறுவப்பட்டுள்ளன. ரயில்வே ஊழியர்களுக்கான மருத்துவ வசதிகள் பாதிக்காத வகையில் மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!