17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை மழை நீர் சேமிப்பு தொட்டியில் தவறி விழுந்த மூதாட்டி பலி சடலமாக மீட்ட தீயணைப்பு தீயணைப்புத்துறையினர்.

மதுரை மழை நீர் சேமிப்பு தொட்டியில் தவறி விழுந்த மூதாட்டி பலி சடலமாக மீட்ட தீயணைப்பு தீயணைப்புத்துறையினர்.

எழுதியவர்: ஆசிரியர் June 24, 2020, 3:16 pm

மதுரை மாவட்டம் சுப்பிரமணியபுரம் காவல் எல்லைக்குட்பட்ட வசந்த நகர் மூன்றாவது தெருவில் வசித்து வரும் பத்மஸ்ரீ வயது 70 இவர் கணவருடன் வசந்த நகரில் தனியாக வசித்து வருகிறார்கள். இவருடைய மகள் வெளிநாட்டில் உள்ளார்.

இந்தநிலையில் வழக்கம்போல பத்மஸ்ரீ இன்று (24/06/2020( காலை வாசல் தெளித்து கோலம் போடும் பொழுது எதிர்பாராதவிதமாக மழைநீர் சேகரிப்பு போடப்பட்டிருந்த தொட்டியில் தவறி விழுந்துள்ளார்.  பல மணி நேரம் மனைவியைக் காணத காரணத்தால் அவருடைய கணவர் அக்கம்பக்கத்தில் தேடியதில் தொட்டியில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாக மதுரை டவுன் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்ததின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சுமார் 35 அடி ஆழமுள்ள மழைநீர் சேமிப்பு தொட்டியில் இருந்து பத்மஸ்ரீ மூதாட்டியின் உடலை சடலமாக மீட்டனர்.

இச்சம்பவம் குறித்து மதுரை சுப்பிரமணியம் போலீசார் விசாரணை மேற்கொள்ள வருகிறார்கள்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!