18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பள்ளி மாணவி தூக்கு போட்டு சாவு ..

பள்ளி மாணவி தூக்கு போட்டு சாவு ..

எழுதியவர்: ஆசிரியர் June 24, 2020, 3:00 pm

மதுரை நிலையூர் தனலட்சுமி நகரைச் சேர்ந்த சுரேஷ் குமார் மகள் மாரியம்மாள் (வயது 17). இவர் திருப்பரங்குன்றம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் அவருக்கு கடந்த ஆறு மாதங்களாக தீராத வயிற்று வலி தொல்லை இருந்து வந்தது.

இதனால் அவர் வீட்டில் வேலைகள் எதுவும் செய்யாமல் இருந்து வந்தார். இதனை பெற்றோர் கண்டித்தனர். இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த மாரியம்மாள் சம்பவத்தன்று இரவு வீட்டில் தூக்குப்போட்டு பரிதாபமாக இறந்தார்.

இது தொடர்பாக ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!