18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையில் துவங்கியது முழு ஊரடங்கு ..வெறிச்சோடிய வீதிகள் … கிறீச் சத்தமிடாத வாகனங்கள் …

மதுரையில் துவங்கியது முழு ஊரடங்கு ..வெறிச்சோடிய வீதிகள் … கிறீச் சத்தமிடாத வாகனங்கள் …

எழுதியவர்: ஆசிரியர் June 24, 2020, 2:55 pm

மதுரை நகராட்சி பகுதி, திருப்பரங்குன்றம் யூனியன், பரவை பேரூராட்சி ஆகிய பகுதிகளில் கொரோனா வேகமாக பரவி வருவதால், அந்த பகுதிகளில் மட்டும் முழு ஊரடங்கு இன்று (24/06/2020) முதல் அறிவிக்கப்பட்டுள்ளது. முழு ஊரடங்கையொட்டி பல பெரிய கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. தேநீர் மற்றும் நகைக் கடைகள் முழுவதுமாக அடைக்கப்பட்டிருந்தன. தேநீர் கடைகள் அடைக்கப்பட்டிருந்ததால், சைக்கிளில் சிலர் டீ விற்பனை செய்தனர். பால் மற்றும் மளிகை பொருட்கள், காய்கறிகள் வழக்கம் போல செயல்பட்டன. பொருட்கள் வாங்க சிலர் சாலைகளில் நடமாடினர். இறைச்சி கடைகள் முன்பாக மக்கள் சமூக இடைவெளியின்றி கூட்டமாக நின்றனர்.

மதுரைஅண்ணாநகர் யாணைக்குழாய் பகுதியில் உள்ள மீன் கடையில் வரிசையாக நிற்காமல் மக்கள் குவிந்து நின்றிருந்தனர். போலீஸார் ரோந்து வாகனத்தில் வந்த போலீசார் அவர்களை எச்சரித்து கலைந்து போக கண்காணித்தபடியே சென்றனர்.

. செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!