17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை திருப்பரங்குன்றத்தில் இந்தியன் ரெட் கிராஸ் அமைப்பு சார்பாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது..

மதுரை திருப்பரங்குன்றத்தில் இந்தியன் ரெட் கிராஸ் அமைப்பு சார்பாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது..

எழுதியவர்: ஆசிரியர் June 24, 2020, 2:51 pm

மதுரை திருப்பரங்குன்றம் பதினாறு கால் மண்டபம் மற்றும் முருகன் கோயிலை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பொது மக்களுக்கு கொரோனா வைரஸ் பரவல் தடுப்பிற்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

திருப்பரங்குன்றம் பகுதியை சேர்ந்த ராஜா அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வை திருப்பரங்குன்றம் வட்டாட்சியர் அவர்கள் தொடங்கி வைத்தனர்.

இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி திருப்பரங்குன்றம் வட்டக்கிளை சேர்மன் பாரதி அவர்கள் முன்னிலையில் அப்பகுதி பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. குருசாமி, பாண்டித்துரை, வடிவேலன், கார்த்திக் ஆகியோர் பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!