17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வைரஸ் அச்சுறுத்தலை பொருட்படுத்தாமல் பாதுகாப்பு உபகரணமின்றி தூய்மை பணியில் ஈடுபடும் பணியாளர்கள்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வைரஸ் அச்சுறுத்தலை பொருட்படுத்தாமல் பாதுகாப்பு உபகரணமின்றி தூய்மை பணியில் ஈடுபடும் பணியாளர்கள்.

எழுதியவர்: ஆசிரியர் June 23, 2020, 11:14 pm

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு பகுதியில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை பொருட்படுத்தாமல் பாதுகாப்பு உபகரணமின்றி தூய்மை பணியில் ஈடுபடும் தூய்மை பணியாளர்கள்.

தமிழகத்தில் கொசோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் அனைவரும் பாதுகாப்பான முறையில் பணி புரிய வேண்டுமென வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே வத்திராயிருப்பு பகுதியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை பொருட்படுத்தாமல், முக கவசம் மற்றும் கையுறை அணியாமலும் தூய்மைப் பணியில் ஈடுபடுவது பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பேரூராட்சி நிர்வாகம் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!