17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பெட்ரோல் டீசல் உயர்வை கண்டித்து இருசக்கர வாகனத்திற்கு மாலை போட்டு மாட்டு வண்டியில் ஏற்றியும், நூதன போராட்டம்…

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பெட்ரோல் டீசல் உயர்வை கண்டித்து இருசக்கர வாகனத்திற்கு மாலை போட்டு மாட்டு வண்டியில் ஏற்றியும், நூதன போராட்டம்…

எழுதியவர்: ஆசிரியர் June 23, 2020, 11:05 pm

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பெட்ரோல் டீசல் உயர்வை கண்டித்து இருசக்கர வாகனத்திற்கு மாலை போட்டு மாட்டு வண்டியில் ஏற்றியும், இருசக்கர வாகனத்தை மனிதன் இழுத்து செல்வது போன்றும் நூதன போராட்டம்…

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக வேலையின்றி ஏராளமான பொதுமக்கள் உணவிற்கே வழியின்றி தவித்து வருகின்றனர். இந்நிலையில் நாளுக்கு நாள் பெட்ரோல் டீசல் உயர்ந்து வருவதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மகாராஜபுரம் கிராமத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முன்னாள் எம்.பி அழகிரிசாமி தலைமையில் இரு சக்கர வாகனத்திற்கு மாலையிட்டு மாட்டு வண்டியில் ஏற்றியும், இரு சக்கர வாகனத்தை மனிதன் கயிறு கட்டி இழுத்துச் செல்வது போன்றும் நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திய மத்திய மாநில அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!