18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சேலத்தில் இருந்து புகையிலை பொருள் கடத்தி வந்த இருவர் கைது…

சேலத்தில் இருந்து புகையிலை பொருள் கடத்தி வந்த இருவர் கைது…

எழுதியவர்: ஆசிரியர் June 23, 2020, 10:59 pm

இராமநாதபுரம் மாவட்டம் காக்கூர் சாலையில்  முதுகுளத்தூர் போலீசார் நேற்று (22.6.2020) இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது,  பரமக்குடியில் இருந்து காக்கூர் சென்ற  வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் மூடை அரிசியுடன், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள்  20 பெட்டிகளை சட்ட விரோதமாக கடத்தி  வந்தது தெரிந்தது.

இதை பறிமுதல் செய்த முதுகுளத்தூர் போலீசார் வாகன உரிமையாளரும், ஓட்டுநருமான சேலம் மாவட்டம் ஜலகண்டபுரம்  மாதையன் மகன்  அய்யனார் (எ) அய்யாத்துரை (33), ராஜமாணிக்கம் மகன் நடராஜன் (28) ஆகியோர் எனவும்,  சிக்கல் சர்புதீன் (58) என்பவருக்காக, சேலம்  மாவட்டம், செவ்வாய்பேட்டை ஜியாவுல் ஹக் என்பவரிடமிருந்து  புகையிலை பொருட்களை  ஏற்றி வந்ததாக  தெரிவித்தனர். இதனையடுத்து இருவரையும் முதுகுளத்தூர் போலீசார் கைது செய்து அரிசி மூடைகள், புகையிலை பொருட்கள் மற்றும் வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!