18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » 2,850  குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் எம்.எல்.ஏ. வழங்கினார்

2,850  குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் எம்.எல்.ஏ. வழங்கினார்

எழுதியவர்: mohan June 23, 2020, 12:09 pm

மயிலாடுதுறை மாவட்டம்,பூம்புகார் சட்டமன்ற தொகுதி, செம்பனார்கோயில் ஒன்றியத்துக்கு உட்பட்ட தில்லையாடி, திருவிடைக்கழி, விசலூர், அன்னவாசல் ஆகிய ஊராட்சி பகுதிகளை சேர்ந்த மக்களுக்கு நிவாரண உதவிகளை எம்எல்ஏ பவுன்ராஜ் வழங்கினார்.செம்பனார்கோவில் ஒன்றியம் தில்லையாடி ஊராட்சிக்கு உட்பட்ட 1,100 குடும்பங்களுக்கும், திருவிடைகழி ஊராட்சியை சேர்ந்த 700 குடும்பத்திற்கும், விசலூர் ஊராட்சியை சேர்ந்த 450-க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கும், அன்னவாசல் ஊராட்சியில் 600-க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு 5 கிலோ அரிசி, காய்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை 2,850 -க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு  பூம்புகார் சட்டமன்ற அஇஅதிமுக உறுப்பினர் எஸ்.பவுன்ராஜ் வழங்கி துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினரும், திருவிடைக்கழி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவருமான விசலூர் கண்ணன், ஒன்றியக்குழு உறுப்பினர் மேமாத்தூர் மைதிலி மகேந்திரன், அன்னவாசல் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ஞானசேகரன், தில்லையாடி சுந்தர், திருவிடைக்கழி சக்திவேல், திருவிடைக்கழி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் செல்வராஜ், ராஜ், பி.பி.பாண்டியன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

இரா. யோகுதாஸ், மயிலாடுதுறை செய்தியாளர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!