18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » விருதுநகரில் கடந்த 21 நாட்களுக்கு மேலாக குடிநீர் வழங்காத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து காலி குடங்களுடன் பெண்கள் தீடீர் சாலை மறியல்…

விருதுநகரில் கடந்த 21 நாட்களுக்கு மேலாக குடிநீர் வழங்காத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து காலி குடங்களுடன் பெண்கள் தீடீர் சாலை மறியல்…

எழுதியவர்: ஆசிரியர் June 23, 2020, 1:37 am

விருதுநகர் நகராட்சிக்கு உட்பட்ட ஏடிபி காம்பவுண்ட் இந்திராநகர் ஆகிய பகுதியில் கடந்த 21 நாட்களுக்கு மேலாக குடிநீர் விநியோகம் செய்யவில்லை எனக் கூறப்படுகிறது.

இதுவரை பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது 21 நாள்கள் ஆகியும் குடிநீர் விநியோகம் செய்யாத காரணத்தால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனால் குடிநீர் வழங்காத நகராட்சியை கண்டித்து ஏடிபி காம்பவுண்டில் அப்பகுதி பெண்கள் காலி குடங்களுடன் புல்லக்கோட்டை சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். பெண்களுடன் போலீசார் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். குடிநீர் முறையாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதி அளித்ததின் பேரில் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!