18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » விருதுநகரில் சட்ட விரோதமாக லோடு ஆட்டோவில் கொண்டு செல்லப்பட்ட ஒரு லட்சம் மதிப்பிலான பட்டாசு திரிகள் பறிமுதல்..

விருதுநகரில் சட்ட விரோதமாக லோடு ஆட்டோவில் கொண்டு செல்லப்பட்ட ஒரு லட்சம் மதிப்பிலான பட்டாசு திரிகள் பறிமுதல்..

எழுதியவர்: ஆசிரியர் June 23, 2020, 12:47 am

விருதுநகர் சூலக்கரை காவல்துறையினர் சூலக்கரையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த பொழுது அந்த வழியாக சென்ற லோடு ஆட்டோவை மடங்கி சோதனை செய்தனர் அதில் பட்டாசு தொழிலுக்கு பயன்படுத்தப்படும் ஒரு லட்சம் மதிப்பிலான கருப்பு திரி இருப்பது கண்டறியப்பட்டது.

பட்டாசு தொழிலுக்கு பயன்படுத்தப்படும் இந்த திரி எளிதில் தீப்பற்ற கூடியது. இதனால் இவற்றை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்க்கு கொண்டு செல்ல கூடாது. ஆனால் சட்டவிரோதமாக இவற்றை லோடு வாகனத்தில் மறைந்து கொண்டு சென்ற டிரைவர் கருப்பையா மற்றும் சீனிவாசன் ஆகியேரை கைது செய்து சூலக்கரை போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.

மேலும் திரி கொண்டு செல்லப் பட்ட சரக்கு வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டு திரி எங்கு இருந்து எங்கு கொண்டு செல்லப் பட்டது என்பது குறித்தும் சூலக்கரை போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!