17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரத்தில் காட்சி ஊடக செய்தியாளர் மறைவு..

இராமநாதபுரத்தில் காட்சி ஊடக செய்தியாளர் மறைவு..

எழுதியவர்: ஆசிரியர் June 22, 2020, 10:01 pm

இராமநாதபுரம் பட்டணம்காத்தான் பகுதியை சேர்ந்த முருகானந்தம் மகன் கணேசன், 45. பட்டதாரியான இவர் காட்சி ஊடகங்களில் கடந்த 13 ஆண்டுகளாக செய்தியாளர் பணியாற்றினார். ஆரம்ப காலங்களில் உள்ளூர் காட்சி ஊடகங்களில் பணியாற்றினார். தனது திறமையால் ராஜ். மதிமுகம் டிவி., யில் ஒளிப்பதிவாளராகவும், மூன் டிவி. செய்தியாளராகவும் பணியாற்றினார். கடந்த சில மாதங்களாக உடல் நலம் பாதித்த இவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றிரவு மறைந்தார் .

கணேசன் மறைவிற்கு ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் சங்கம், பிற மாவட்டங்களை சேர்ந்த செய்தியாளர்கள் , ஒளிப்பதிவாளர்கள், ஊடகவியலாளர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். மிகவும் நலிந்த பத்திரிகையாளரான கணேசன் குடும்பத்தாருக்கு அரசு குடும்ப நல நிவாரணம் வழங்க வேண்டும் என செய்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!