17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உணவு தேடி வந்த புள்ளிமான் முள் வேலியில் சிக்கியது. மீட்ட வனத்துறையினர்

உணவு தேடி வந்த புள்ளிமான் முள் வேலியில் சிக்கியது. மீட்ட வனத்துறையினர்

எழுதியவர்: mohan June 22, 2020, 5:03 pm

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே உள்ள பள்ளப்பட்டி என்கின்ற கிராமத்தில் சுமார் ஒன்றரை வயது மதிக்கத்தக்க பெண் புள்ளி மான் ஒன்று உணவு தேடி ஊருக்குள் வந்தது. முள்வேலியில் எதிர்பாராதவிதமாக சிக்கியதால் இதை பார்த்த பொதுமக்கள் ஊராட்சி மன்ற தலைவருக்கு தகவல் கொடுக்கவே ஊராட்சி மன்ற தலைவர் வனத்துறைக்கு தகவல் கொடுத்து பத்திரமாக எவ்வித காயமும் இன்றி வனத்துறையினர் புள்ளி மானை மீட்டு உணவளித்து பின் பத்திரமாக கொட்டாம்பட்டி அருகே உள்ள வளர்ச்சி பட்டி மலைப்பகுதியில்  மானை கொண்டுவிட்டனர். நேற்று முன்தினம் இதே போன்ற உணவு தேடி வந்த இரண்டு வயது மதிக்கத்தக்க ஆண் புள்ளிமான் ஒன்று இறை தேடி வரும் பொழுது கிணற்றுக்குள் விழுந்தது இதை தீயணைப்புத் துறையினரும் வனத்துறையினரும் பத்திரமாக மீட்டு பெருமாள் மலைப்பகுதியில் பத்திரமாக கொண்டி விடப்பட்டது குறிப்பிடத்தக்கது ஆகும்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!