17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சோழவந்தான் வைகை ஆற்றில் மூழ்கி மாணவர் பலி

சோழவந்தான் வைகை ஆற்றில் மூழ்கி மாணவர் பலி

எழுதியவர்: mohan June 22, 2020, 2:52 pm

மதுரை வைத்தியநாதபுரம் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மகன் ஆகாஷ்  18. இவர் சோழவந்தான் பூ மேட்டு தெருவில் உள்ள சித்தி பிரமிளா  வீட்டுக்கு விருந்தாளியாக வந்துள்ளார் . மாலை நண்பர்களுடன் சேர்ந்து வைகையாற்றில் உள்ள தண்ணீரில் குளிக்க சென்றுள்ளார். இவர்கள் அனைவருக்கும் நீச்சல் தெரியாது. இந்நிலையில் ஆகாஷ் அங்குள்ள பள்ளத்தில் மூழ்கி உள்ளார் .கூட வந்த நண்பர்கள் வீட்டுக்கு  தகவல் கொடுத்தனர். இவர்களின் தகவலின் பேரில் சோழவந்தான் சப்-இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் தீயணைப்பு நிலைய அலுவலர் சீனிவாசன் போக்குவரத்து அலுவலர் பழனிமுத்து ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று வைகை ஆற்றில் மூழ்கிய ஆகாஷ்பிணத்தை மேலே கொண்டுவந்தனர். பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் கொண்டு சென்றனர் .இதுகுறித்து சோழவந்தான் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!