18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ரூ.15.15 செலவில் கட்டப்பட்ட அங்கன்வாடி -சமையல் கூடம் கட்டிடத்தை எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்

ரூ.15.15 செலவில் கட்டப்பட்ட அங்கன்வாடி -சமையல் கூடம் கட்டிடத்தை எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்

எழுதியவர்: mohan June 22, 2020, 11:57 am

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ.15.15 செலவில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டடம் மற்றும் சமையல் கூடம் கட்டடத்தை எம்.எல்.ஏ. பவுன்ராஜ் திறந்து வைத்தார்.செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அன்னவாசல் ஊராட்சிக்குட்பட்ட கழனிவாசல் பகுதியில் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.7 லட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையக் கட்டடம், கொத்தங்குடி ஊராட்சிக்குட்பட்ட வேலம்புதுக்குடி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ரூ.8.15 லட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்ட சமையல் கூடம் மற்றும் சுற்றுச்சுவர் ஆகியவற்றை பூம்புகார் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ். பவுன்ராஜ் திறந்து வைத்து அன்னவாசல் கட்டட வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டு கொரோனா நோய் விழிப்புணர்வு தொடர்பாக கிராம் மக்களிடம் பேசினார்.

நிகழ்வில் ஒன்றிய ஆணையர் அருண், திருவிளையாட்டம் ஊராட்சி மன்ற தலைவர் சுகுணா கண்ணன், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவர் முரளி, இயக்குனர் இளையராஜா, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் சதக்கத்துல்லா மற்றும் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இரா.யோகுதாஸ், மயிலாடுதுறை  செய்தியாளர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!