18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கொரோனா வைரஸை பொருட்படுத்தாமல் ஸ்ரீவில்லிபுத்தூரில் முண்டியடித்துக்கொண்டு மது வாங்கிய மது பிரியர்கள்…

கொரோனா வைரஸை பொருட்படுத்தாமல் ஸ்ரீவில்லிபுத்தூரில் முண்டியடித்துக்கொண்டு மது வாங்கிய மது பிரியர்கள்…

எழுதியவர்: ஆசிரியர் June 21, 2020, 9:44 pm

கொரோனா வைரஸ் தாக்கம் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் காலை 10 மணி முதல் இரவு 8 மணிவரை மதுபான கடைகள் திறக்க தமிழக அரசு உத்தரவிட்ட நிலையில் தற்போது மது விற்பனை படு ஜோராக நடைபெற்று வருகிறது. மேலும் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர காவல் நிலையம் அருகே செயல்பட்டு வரும் அரசு மதுபானக் கடையில் இரவு நேரத்தில் முக கவசமின்றி முண்டியடித்துக்கொண்டு கூட்டம் கூட்டமாக மதுப்பிரியர்கள் மது வாங்கி சென்றனர். இதனால் நோய்த்தொற்றும் அபாயம் உள்ளதால் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!