18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » லடாக் எல்லையில் வீரமரணமடைந்த வீரர்களுக்கு மோட்ச தீபம் ஏற்றி சீன கொடியை எரித்து போராட்டம் …

லடாக் எல்லையில் வீரமரணமடைந்த வீரர்களுக்கு மோட்ச தீபம் ஏற்றி சீன கொடியை எரித்து போராட்டம் …

எழுதியவர்: ஆசிரியர் June 21, 2020, 8:04 pm

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பேருந்து நிலையம் அருகில் லடாக்கில் இந்திய திருநாட்டிற்கு காக்க உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு மோட்ச தீபம் ஏற்றி மற்றும் வீரவணக்கம் செலுத்தி சீன பொருட்களை புறக்கணிக்க கோரி சீன அதிபர் மற்றும் சீன கொடி எரித்து போராட்டம் நடைபெற்றது.

இதில் மதுரை மாவட்ட அகில பாரத அனுமன் சேனா சார்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு தலைமை இராமலிங்கம், மாநில முதன்மை பொதுச் செயலாளர், ஹரி மாவட்ட பொதுச் செயலாளர். சக்திவேல் மாவட்ட செயலாளர். அரவிந்தன் மாவட்ட இளைஞரணி,  பொதுச்செயலாளர் பிரபு, நகர் தலைவர் வசந்தன், பொருளாளர் குன்றத்து சித்தன், கிருஷ்ணன், வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் திருப்பரங்குன்றம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!