18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பல இடங்களில் கை வரிசை காட்டிய செயின் திருட்டு முதியவர் மன்னார்குடியில் வளைத்த போலீசார்..

பல இடங்களில் கை வரிசை காட்டிய செயின் திருட்டு முதியவர் மன்னார்குடியில் வளைத்த போலீசார்..

எழுதியவர்: ஆசிரியர் June 21, 2020, 6:52 pm

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உடன்குடியைச் சேர்ந்தவர் தங்கமுத்து, 68. கடந்த 3 ஆண்டுகளாக மேலாக தமிழகத்தின்  பல்வேறு மாவட்டங்கள், ஆந்திரா, கேரளா பகுதிகளில் திருட்டு, வழிப்பறிகளில் ஈடுபட்டு வந்த இவர் மீது 50க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. போலீசாருக்கு மிகவும் சவாலாக இருந்த இவர் மன்னார்குடியில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது.

இதன்படி, ராமநாதபுரம் எஸ்.பி., வருண்குமார் அறிவுறுத்தல் படி சார்பு ஆய்வாளர் சித்ரா தலைமையில் திருவாடானை குற்றப்பிரிவு போலீசார் மன்னார்குடி சென்றனர். அங்கு பதுங்கியிருந்த தங்கமுத்துவை கைது செய்து, அவரிடமிருந்து 10 பவுன் நகையை பறிமுதல் செய்தனர். தங்கமுத்து மீதான நிலுவை வழக்குகள் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!