17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருவாடானை அருகே நூற்பாலை தொழிலாளர்கள் திடீர் முற்றுகை…

திருவாடானை அருகே நூற்பாலை தொழிலாளர்கள் திடீர் முற்றுகை…

எழுதியவர்: ஆசிரியர் June 21, 2020, 6:23 pm

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே  சின்ன கீரமங்கலத்தில் தனியார் மில் இயங்கி வருகிறது. இங்கு 100க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள், 40 நிரந்தர தொழிலாளர்கள், 80க்கும் மேற்பட்ட தற்காலிக தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். கொரானா தொற்று பரவல் தடுப்பு ஊரடங்கு உத்தரவையடுத்து ஆலை மூடப்பட்டது.

இதனால், இங்கு பணியாற்றும் தொழிலாளர்கள் வேலை இழந்தனர். ஆலை தொழிலாளர்களுக்கு ஏப்ரல், மே மாத ஊதியம் வழங்க  மத்திய, மாநில அரசுகள் உத்தரவிட்டது. ஊரடங்கு உத்தரவு நாளில் இருந்து இன்று வரை சம்பளம் வழங்காமல் நிர்வாகம் தாமதித்து வருகிறது.

இது குறித்து நிர்வாகத்திடம் ஆலை தொழிலாளர்கள் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை. சம்பளம், வழங்காதது குறித்து திருவாடானை தாசில்தார், திருவாடானை காவல் கண்காணிப்பாளரிடமும் புகார் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் தங்கள் குடும்பங்கள் பசி, பட்டினியால் வாடி வருவதால் ஆவேசமடைந்த  ஆலையை முற்றுகையை அனுமதி கோரினர்.  அனுமதி மறுக்கப்பட்டதால்,  ஆலை முன் தொழிலாளர்கள் இன்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து நிர்வாகத்திடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்ததை தொடர்ந்து கலைந்து சென்றனர். இதற்கு நிர்வாகம் செவி சாய்க்காத பட்சத்தில் தொடர் போராட்டம் நடத்தப்படும் என தொழிலாளர்கள் கூறினர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!