17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரத்தில் குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு ரத்த தான முகாம்…

இராமநாதபுரத்தில் குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு ரத்த தான முகாம்…

எழுதியவர்: ஆசிரியர் June 20, 2020, 9:37 pm

உலக குருதி கொடையாளர் தினத்தையொட்டி இராமநாதபுரம் ரெட் கிராஸ், ராஜெம் மோட்டார்ஸ், ராஜெம் கார்ஸ், அன்பு டிவிஎஸ்சார்பில் இராமநாதபுரம் ராஜெம் மோட்டார்ஸ் ஷோரூமில் இன்று (20.6.2020) ரத்த தான முகாம் நடைபெற்றது.

ராஜெம் மோட்டார்ஸ் உரிமையாளர் நல்லமுத்து தலைமை தாங்கினார். ஏவிஎம்எஸ் மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி தாளாளரும்  ஜூனியர் ரெட் கிராஸ் துணைத் தலைவருமான எஸ்.ஜெயக்குமார்,  முன்னிலை வகித்தார். ரெட் கிராஸ் பொருளாளர் சி.குணசேகரன் வரவேற்றார். ரெட் கிராஸ் சேர்மன் எஸ். ஹாரூன் தொடங்கி வைத்தார்.

ரத்த தானத்தின் அவசியம் குறித்து ரெட் கிராஸ் புரவலர் முனைவர் எம்.உலகராஜ் பேசினார்.  மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை ரத்த வங்கி டாக்டர் கே.பாத்திமா ஃபத்துல் ராணி பாத்திமா தலைமையில் மருத்துவக் குழுவினர் தன்னார்வலர்கள் 32 பேரிடம் இருந்து ரத்தம் சேகரித்தனர்.  ரெட் கிராஸ் சொசைட்டி மாவட்ட செயலர் எம்.ராக்லாண்ட் மதுரம்,  ஜூனியர் ரெட் கிராஸ் கல்வி மாவட்ட கன்வீனர்கள் எம்.ரமேஷ் (ராமநாதபுரம்), எம். பாலமுருகன் (மண்டபம்),  பசுமை ரெட் கிராஸ் அமைப்பாளர் ஏ.மலைக்கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். குருதி கொடையாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.  ராமநாதபுரம் மாவட்ட ரெட் கிராஸ் சொசைட்டி ரத்த தான பிரிவு அமைப்பாளர் எஸ். அய்யப்பன் நன்றி கூறினார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!