17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » முன்விரோதம் காரணமாக அண்ணன், தம்பி இருவருக்கு அரிவாள் வெட்டு… 3பேர் கைது..

முன்விரோதம் காரணமாக அண்ணன், தம்பி இருவருக்கு அரிவாள் வெட்டு… 3பேர் கைது..

எழுதியவர்: ஆசிரியர் June 20, 2020, 9:32 pm

இராஜபாளையம் அருகே தேசிகாபுரத்தில் முன்விரோதம் காரணமாக அண்ணன், தம்பி இருவருக்கு அரிவாள் வெட்டு. இந்த கொலை முயற்சி தொடர்பாக அண்ணன் தம்பி மூன்று பேர் கைது.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள தேசிகாபுரம் பகுதியில் கடந்த நான்கு முன்விரோதம் காரணமாக தங்கவேல் என்பவர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கொலைக் குற்றவாளிகளாக அதே பகுதியைச் சார்ந்த 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில் மூன்று மாதம் கழித்து அனைவரும் ஜாமீனில் வெளியே வந்துள்ளனர்.

இதற்கிடையில் தங்கவேல் கொலைக்கு பழிக்கு பழியாக பழிவாங்கும் நோக்கத்தில் சக்திவேல், தர்மராஜ் அண்ணன் – தம்பி இருவரும் வேலைக்காக இருசக்கர வாகனத்தில் சென்ற பொழுது நேற்று முன்தினம் 4 பேர் கொண்ட கும்பல் மண்வெட்டி மற்றும் அரிவாளால் சரமாரியாக வெட்டியதில் இருவரும் பலத்த காயம் அடைந்து பாளையங்கோட்டை மற்றும் மதுரை அரசு மருத்துவமணைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து தளவாய்புரம் காவல் நிலைய ஆய்வாளர் முத்துக்குமார் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த முனிராஜ், பாலமுருகன், பாலசுப்ரமணி என்ற 3 பேரை கைது செய்தனர். (இவர்கள் முன்றுபேரும் அண்ணன் தம்பிகள்) பழிக்குப்பழியாக கொலை முயற்சியில் ஈடுபட்டதாக வாக்குமூலம் அளித்தன் பெயரில் மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!