18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் 6 லட்சம் மதிப்புடைய தடைசெய்யப்பட்ட புகையிலைப்பொருட்கள் பறிமுதல்…

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் 6 லட்சம் மதிப்புடைய தடைசெய்யப்பட்ட புகையிலைப்பொருட்கள் பறிமுதல்…

எழுதியவர்: ஆசிரியர் June 20, 2020, 9:14 pm

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் 6 லட்சம் மதிப்புடைய தடைசெய்யப்பட்ட புகையிலைப்பொருட்கள் பறிமுதல் ஜெயபாலாஜி என்பவரை கைது செய்து அருப்புக்கோட்டை நகர் காவல்துறையினர் விசாரணை.

கொரோணா ஊரடங்கை பயன்படுத்தி தடைசெய்யப்பட்ட புகையிலைப்பொருட்களை வெளியூரிலிருந்து கடத்தி அதிகவிலைக்கு விற்பதற்காக அருப்புக்கோட்டை சிங்காரத்தோப்பில் உள்ள ஒரு வீட்டில் மூடை மூடையாக பதுக்கி வைத்திருப்பதாக அருப்புக்கோட்டை நகர் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது தகலையடுத்து சிங்காரத் தோப்பில் உள்ள குறிப்பிட்ட வீட்டில் சோதனை செய்த போலீசார் அங்கு மூடைமூடையாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர் காவல்துறையினரின் விசாரணையில் பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களின் மொத்த மதிப்பு 6 லட்சம் ரூபாய் என தெரியவந்தது மேலும் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்த ஜெய பாலாஜி என்பவரை கைது செய்து அருப்புக்கோட்டை நகர் காவல் துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் ஜெய பாலாஜி அளித்த தகவலின் பேரில் அவரது கூட்டாளியான விமல் என்பவரையும் தேடிவருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!