ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே புதுக்கோட்டை பகுதியில் போலீசார் 24 மணி நேரமும் வாகன சோதனை மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில்
நள்ளிரவு புதுக்கோட்டையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அது வழி வந்த சரக்கு வாகனத்தை சோதனை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் தலா 50 கிலோ எடை கொண்ட 75 மூடை ரேஷன் அரிசி இருந்தது. வாகனத்தில் வ வந்த 3 பேரிடம் விசாரித்ததில், மதுரையை சேர்ந்த முத்துக்குமார்,பால்பாண்டி , சோனைமுத்து ஆகியோர் ரேஷன் அரிசி கடத்தியது தெரிந்தது. கைது செய்த 3 பேரையும், பறிமுதல் செய்த அரிசி மூடைகளுடன் வாகனத்தை விருதுநகர்
உணவு கடத்தல் தடுப்பு பிரிவினரிடம் கமுதி போலீசார் ஒப்படைத்தனர்.
கமுதி அருகே வாகன சோதனையில் ரேஷன் அரிசி மூடைகளுடன் சிக்கிய 3 பேர்
எழுதியவர்: mohan June 20, 2020, 5:23 pm




You must be logged in to post a comment.