17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சீர்காழி வட்டாட்சியர் அலுவலக ஊழியருக்கு கொரோனா தொற்று. அலுவலகத்துக்கு பூட்டு. பணிகள் முடக்கம்.

சீர்காழி வட்டாட்சியர் அலுவலக ஊழியருக்கு கொரோனா தொற்று. அலுவலகத்துக்கு பூட்டு. பணிகள் முடக்கம்.

எழுதியவர்: mohan June 20, 2020, 5:18 pm

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் இளநிலை உதவியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்ட எல்லையில் உள்ள சோதனை சாவடியில் சென்னையிலிருந்து வரும் வெளியூர் பயணிகளை சோதனை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். இவர் சீர்காழி அரசு மருத்துவமனையில் சுய கொரோனா பரிசோதனை செய்துகொண்டார். இதில் கொரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது.

இதனையடுத்து சீர்காழி தாலுக்கா அலுவலத்தை பூட்டி கிருமிநாசினி அடித்து வருகின்றனர். மேலும் அலுவலகத்தில் பணிபுரியும் 200 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ய உள்ளனர். இதனால், பணிகள் முற்றிலும் முடங்கியுள்ளது. மேலும் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தவர்கள் யார் யார் என கணக்கெடுப்பு நடத்த உள்ளனர். இதனால் சீர்காழி தாலுகா பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இரா.யோகுதாஸ், மயிலாடுதுறை  செய்தியாளர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!