18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை கல்பாலம் அருகே அமைக்கப்பட்டுள்ள படுகை அணையின் பெயர்ந்த கற்கள் சீரமைக்கப்படுமா?

மதுரை கல்பாலம் அருகே அமைக்கப்பட்டுள்ள படுகை அணையின் பெயர்ந்த கற்கள் சீரமைக்கப்படுமா?

எழுதியவர்: mohan June 20, 2020, 5:09 pm

மதுரை நகரில் குடிநீர் ஆதாரங்களை மேம்படுத்த வைகை அணையின் பல இடங்களில் படுகை அணை பெட் டேம் கட்டப்பட்டது.மதுரை கோரிப்பாளையம் அருகே இரண்டு இடங்களிலும் இவை தவிர சோழவந்தான் அருகே திருவேடகம், திருபுவனம் ஆகிய பல இடங்களில் வைகை ஆற்றில் மதகுகளுடன் படுகை அணை கடந்த ஆண்டு அமைக்கப்பட்டது.இதனால் வைகை ஆற்றில் கரையோரமாக அமைந்துள்ள பகுதிகளில் நீர் மட்டம் உயர்ந்து, குடிநீர் ஆழ்துளை கிணறுகள் தொடர்ந்து செயல்படத் தொடங்கின

மதுரை நகரில் பல பகுதிகளில், தெப்பக்குளம், சிம்மக்கல், ஓபுளா படித்துறை, வெங்கிடசாமி நாயுடு அக்ரஹாரம், முனிச்சாலை, செல்லூர், வண்டியூர் ஆகிய வைகை நதியை ஓட்டியுள்ள பகுதிகளில் செயல்படாத ஆழ்துளைகளில் புதியதாக நீர் ஊற்று ஆரம்பித்தது.படுகை அணைகள் அமைக்கப்படுவதால், மதுரை மாநகராட்சி சார்பில் வைகை நதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் கிணறுகளுக்கு நீர் ஊற்று அதிகரிக்க தொடங்கியதாம்.

இவ்வாறு, மதுரை கோரிப்பாளையம் கல் பாலம் அருகே கட்டப்பட்ட படுகை அணையில் கற்கள் பெயர்ந்து காணப்படுகிறது. இதை சம்மத்தப்பட்ட பொதுப்பணித்துறையினர், உடனடியாக படுகை அணையின் பெயர்ந்த நிலையில் உள்ள கற்களை சீரமைக்க சமூக ஆர்வலர்கள் கோரியுள்ளனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!