18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மேற்குவங்காள துறைமுகத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பெயரை மீண்டும் வைக்க போராட்டம்

மேற்குவங்காள துறைமுகத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பெயரை மீண்டும் வைக்க போராட்டம்

எழுதியவர்: mohan June 20, 2020, 4:21 pm

அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் சார்பாக மதுரை கிழக்கு மாவட்டத்தின் சார்பாக திருப்பரங்குன்றம் யூனியன் அலுவலகம் முன்பாக நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பெயர் மீண்டும் மேற்கு வங்காளத்தில் கப்பல் துறைமுகத்திற்கு வைக்க வேண்டும் துறைமுகத்திலிருந்து பெயரை நீக்கப்பட்டதை கண்டித்து மத்திய அரசு மோடி அரசை கண்டித்தும் மேற்கு வங்காள அரசு மம்தா பானர்ஜி அரசை கண்டித்து மதுரை கிழக்கு மாவட்டம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பொதுச்செயலாளர் எம்.மோகன் தலைமையிலும் மாவட்ட துணை செயலாளர் அழகு சுந்தர பாண்டியன் தலைமையிலும் ஒன்றிய செயலாளர் சபின் முன்னிலையிலும் மாநில தொழிற்சங்க செயலாளர் ஆர்திருப்பதி தலைமை மற்றும் நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு முழக்கங்களை எழுப்பினார்கள் பாதுகாப்பு பணியில் திருநகர் காவல்துறையினர் ஈடுபட்டிருந்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!