17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சீர்காழியில் பாரதி தெரு பயன்பாட்டிற்கு திறப்பு .பல ஆண்டுகள் கோரிக்கை நிறைவேற்றம் தெருவாசிகள் வரவேற்பு

சீர்காழியில் பாரதி தெரு பயன்பாட்டிற்கு திறப்பு .பல ஆண்டுகள் கோரிக்கை நிறைவேற்றம் தெருவாசிகள் வரவேற்பு

எழுதியவர்: mohan June 20, 2020, 11:36 am

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி பஞ்சாயத்து யூனியன் அலுவலகம் பின்புறம் உள்ள பகுதியில் பல குடும்பத்தினர்கள் வசித்து வருகின்றனர் .இப்பகுதி மக்கள் சென்று வர பல ஆண்டுகளாக யூனியன் வளாகம் வழியை பயன்படுத்தி வந்தனர் .போதிய போக்குவரத்து வழி இல்லாமல் சிரமப்பட்டனர். இது குறித்து சீர்காழி எம்.எல்.ஏ. பி.வி.பாரதியிடம் கோரிக்கை விடுத்தனர்.இதனையடுத்து எம் எல் ஏ பாரதி உரிய தனி பாதை அமைத்திட அரசு அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். இதனைத் தொடர்ந்து திட்டை சாலை வழியாக குடியிருப்பு வாசிகள் சென்று வர சிமென்ட் சாலையுடன் புதிய பாதை( தெரு) அமைத்து பாரதி தெரு என பெயரிடப்பட்டது. புதிய பாரதி தெரு திறப்பு விழா மற்றும் நகராட்சியிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடந்தது. சீர்காழி ஒன்றிய ஆணையர் ரெஜினா ராணி, வட்டார வளர்ச்சி அலுவலர் கஜேந்திரன், நகராட்சி பொறியாளர் வசந்தன், ஒன்றிய பொறியாளர் தாரா முன்னிலை வகித்தனர். எம் எல் ஏ பி.வி.பாரதி புதிய தெரு பெயர் பலகையை திறந்து வைத்து பயன்பாட்டிற்கு அளித்தார் . தொடர்ந்து தெருவாசிகள் மகாலிங்கம் தலைமையில் எம் எல் ஏ க்கு பாராட்டு நிகழ்வு சமூக இடைவெளியுடன் நடந்தது. இதில் அதிமுக நகர செயலாளர் பக்கிரி சாமி, ஒன்றிய செயலாளர் ராஜமாணிக்கம், பேரூர் கழக செயலாளர் போகர்.ரவி, ஜெ.பேரவை செயலாளர் மணி, ஒன்றிய எம் ஜிஆர் இளைஞர் மன்ற செயலாளர் திருமாறன், வழக்கறிஞர்கள் மணிவண்ணன், நெடுஞ்செழியன், ரோட்டரி துணை ஆளுனர் சாமி.செழியன், முன்னாள் துணை ஆளுனர் சுசீந்திரன், ஆசிரியர் கோவி.நடராஜன், பொறியாளர் சுரேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இரா.யோகுதாஸ், மயிலாடுதுறை செய்தியாளர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!