17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » புதிய பொது வினியோக கட்டிடம் மற்றும் மீன் விற்பனைக் கூடம் ஆகிய கட்டங்களை பூம்புகார் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

புதிய பொது வினியோக கட்டிடம் மற்றும் மீன் விற்பனைக் கூடம் ஆகிய கட்டங்களை பூம்புகார் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

எழுதியவர்: mohan June 20, 2020, 10:47 am

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தரங்கம்பாடி பேரூராட்சியில் தரங்கம்பாடி பகுதியில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து சுமார் 11 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பொது விநியோக அங்காடியை பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் எஸ். பவுன்ராஜ் திறந்து வைத்தார்.அதேபோல், தரங்கம்பாடியை அடுத்து, வெள்ளக்கோவில் கிராமத்தில் மீன் விற்பனை கூடம் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் எஸ் பவுன்ராஜ் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து சுமார் 19.57லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட மீன் விற்பனைக் கூடத்தை பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் எஸ். பவுன்ராஜ் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் செம்பனார்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தியாகராஜன் மற்றும் அருண் உதவி பொறியாளர் சோமசுந்தரம் மற்றும் தரங்கம்பாடி, வெள்ளக்கோவில் மீனவ பஞ்சாயத்தார்கள் அதிமுக கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இரா.யோகுதாஸ், மயிலாடுதுறை  செய்தியாளர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!