18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையில் பொது வாழ்வில் ஈடுபட்டு வருபவர்கள் நோட்டீஸ் ஒட்டி விளம்பரம் தேடும் நோக்கில் செயல்பட்டு வருகிறார்கள்-அமைச்சர் ஆர்.பி

மதுரையில் பொது வாழ்வில் ஈடுபட்டு வருபவர்கள் நோட்டீஸ் ஒட்டி விளம்பரம் தேடும் நோக்கில் செயல்பட்டு வருகிறார்கள்-அமைச்சர் ஆர்.பி

எழுதியவர்: mohan June 19, 2020, 6:17 pm

மதுரையில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் 27 சானிட்டரி மிஷன்களை நந்தினி ரியல் எஸ்டேட் பிரபு, மீனாட்சி பேன் ஹவுஸ் சரவணன், மதுரை கிழக்கு ரோட்டரி சங்க தலைவர் சமூக ஆர்வலர் நெல்லை பாலு மற்றும் குழுவினர் சார்பாக மதுரை மாநகர காவல்துறை ஆணையாளர் டேவிட்சன் தேவாசீர்வாதம், மாவட்ட ஆட்சியர் வினய், மாநகராட்சி ஆணையாளர் விசாகன் ஆகியோர் முன்னிலையில் தமிழக வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்.இதில் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ராமகிருஷ்ணன் மனநல மருத்துவர் சி.இராமசுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்,

கொரோனா வைரஸில் இருந்து மக்களை காக்கும் பணியில் முதல்வர் ஈடுபட்டு வருகிறார், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது, தமிழக முதல்வரின் எண்ணத்தை அதிகாரிகள் நிறைவேற்றி வருகிறார்கள், பேரிடர் காலத்தில் மக்களுக்கு நம்பிக்கை ஊட்டும் வகையில் பொது வாழ்வில் ஈடுபட்டு வருபவர்கள் செயல்பட வேண்டும், மதுரையில் பொது வாழ்வில் ஈடுபட்டு வருபவர்கள் விளம்பரம் தேடும் நோக்கில் செயல்பட்டு வருகிறார்கள், கொரைனா வைரசை தடுக்க ஒவ்வொருவரும் இராணுவ வீரர் போல செயல்பட்டு வருகின்றனர், போர் களத்தில் எதிரிகள் எப்போது வருவார்கள் என தெரியாது, அதுபோல தான் கொரைனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர்,

மதுரையில் உள்ள 35 லட்சம் மக்களை காக்க காவல் துறை சுகாதார துறை உள்ளிட்ட பணியாளர்கள் உயிரை துச்சமென மதித்து போராடி வருகிறார்கள்.எல்லை பகுதியில் உயிர் நீத்த ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த பழனி என்ற ராணுவ வீரர் எதிரிகள் வருகிறார்கள் என தெரிந்தவுடன் உயிரை துச்சமென மதித்து அந்த இடத்தில் உயிர் விட்டு நம் மனதில் ரோல் மாடலாக திகழ்ந்துள்ளார்.அதே போல் மக்களை காப்பதில் அரசும், அரசு பணியாளர்களும் உயிரை துச்சமென மதித்து பணியாற்றி வருகிறார்கள் என கூறினார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!