18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பரமக்குடி திருப்புல்லாணி வட்டாரங்களில் ராகுல் காந்தி பிறந்த நாள் விழா

பரமக்குடி திருப்புல்லாணி வட்டாரங்களில் ராகுல் காந்தி பிறந்த நாள் விழா

எழுதியவர்: mohan June 19, 2020, 4:20 pm

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் 50வது பிறந்த நாளை விவசாயிகள் பாதுகாப்பு தினமாக கொண்டாட தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு கடிதம் அனுப்பியிருந்தார். இதன்படி பரமக்குடியில் நடந்த ராகுல் காந்தி பிறந்த நாள் விழாவில் காங்கிரஸ் கொடி ஏற்றப்பட்டு விவசாய குடும்பங்களுக்கு,மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. லடாக் எல்லையில் உயிர் நீத்த இந்திய ராணுவ வீரர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

திருப்புல்லாணி வட்டார காங்கிரஸ் சார்பில் விவசாயிகளுக்கு மரக்கன்று வழங்கும் விழா நிகழ்வு நடந்தது. திருப்புல்லாணி கிழக்கு வட்டார தலைவர் சேதுபாண்டியன் தலைமை வகித்தார். மாவட்ட காங்., துணை தலைவர் எம்கே. முத்துகிருஷ்ணன், ஒன்றிய கவுன்சிலர் திருமுருகன் (உத்திரகோசமங்கை) முன்னிலை வகித்தனர். போகலூர் வட்டார தலைவர் முனீஸ்வரன், வட்டார துணைத்தலைவர் கூரிசெல்வம், வேளானூர் கணபதி , திருப்புல்லாணி நகர் தலைவர் ரத்தினக்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!