18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » முதலமைச்சரை கீழ்தரமாக விமர்சித்தால் பெரிய ஆளாகி விடலாம் என எண்ணுகிறார்கள்… அமைச்சர் பேச்சு..

முதலமைச்சரை கீழ்தரமாக விமர்சித்தால் பெரிய ஆளாகி விடலாம் என எண்ணுகிறார்கள்… அமைச்சர் பேச்சு..

எழுதியவர்: ஆசிரியர் June 19, 2020, 3:42 pm

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் பகுதியில்  255 மகளிர் குழுக்களுக்கான கடனுதவி 1 கோடி 74 லட்சம்   வழங்கும் விழாவை தொடக்கி வைத்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. அவர் கூறுகையில்,  கொரானவை கட்டுபடுத்தும் அரசாக, மத்திய மாநில அரசுகள் உள்ளது. இக்கட்டான சூழ்நிலையில் கூட நாடகம் ஆடுகிறார்கள்.நாடு முழுவதும் குடிநீர் பிரச்சனை இல்லை – மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் பற்றாக்குறை இல்லை. முதல்வரை குறை கூறினால் நாம் பெரிய ஆளாகி விடுவோம் என நினைக்கிறார்கள் – குளிர் காய நினைக்கிறார்கள்.

தெலுங்கானா  ஆந்திரா போன்ற மாநிலங்களைவிட தமிழகம் பல மடங்கு மக்கள் தொகை கொண்டது .இக்கட்டான சூழ்நிலையில் கரம் கோர்க்காமல் இழிவு படுத்தும் நிலை வெளிமாநிலத்தை விட தமிழகத்தில் தான் உள்ளது – அவர்களை மன்னிக்கவே முடியாது. தமிழ் நாட்டில் உள்ளவர்கள் தொற்றை பரப்பவில்லை – புனே, பம்பாய், கொல்கத்தா என வெளி மாநிலத்தில் இருந்து வந்தவர்கள் தான் பரப்பிவிட்டார்கள். விருதுநகர் மாவட்டத்தில் தொடர்ந்து வைரஸ் தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் பேசினார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!