18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராஜபாளையம் பகுதியில் பழைய கிணறு மற்றும் குளங்கள் மற்றும் கண்மாய்களை தூர் வாரும் பணிகளை சாத்தூர் எம்எல்ஏ ஆய்வு…

இராஜபாளையம் பகுதியில் பழைய கிணறு மற்றும் குளங்கள் மற்றும் கண்மாய்களை தூர் வாரும் பணிகளை சாத்தூர் எம்எல்ஏ ஆய்வு…

எழுதியவர்: ஆசிரியர் June 19, 2020, 3:36 pm

இராஜபாளையம் அருகே சட்டிகிணறு, திருவேங்டபுரம், சத்திரப்பட்டி , உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பழைய கிணறு மற்றும் குளங்கள் மற்றும் கண்மாய்களை தூர் வாரும் பணிகளை சாத்தூர் எம்எல்ஏ ஆய்வு.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள சத்திரப்பட்டி சட்டிகிணறு, திருவேங்கிடபுரம், கம்மாபட்டி ,சத்திரபட்டி , நல்லம நாயக்கன்பட்டி , கொருக்காம்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளில் ஊர் மத்தியில் உள்ள பாழடைந்த கிணறு ,குளங்கள், கண்மாய்களை தூர்வாரி நிலத்தடி நீரை சேமித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பயன்படும் விதமாக சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது இந்த பணிகள் மூலம் பழைய கிணறுகளில் சரி செய்து அதன் மூலம் குடிநீர் மற்றும் தண்ணீர் பற்றாக்குறையை தீர்க்கும் நோக்கத்தோடு சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மன் அப்பகுதியில் சுமார் 60 லட்சம் ரூபாய் மதிப்பில் உள்ள பணிகளை பார்வையிட்டு அரசு அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என அதிகாரிகளக்கு வேண்டுகோள் விடுத்தார் இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் வேல்முருகன் உள்ளிட்ட அதிமுக பொறுப்பாளர் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர் செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!